போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாக, 14 லட்சம் ரூபாய் மோசடி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாக, 14 லட்சம் ரூபாய் மோசடி

Added : நவ 17, 2021
Share
ராம்நகர் : போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாக, 14 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.பெங்களூரு கெங்கேரி அருகே உள்ள ராமோஹள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராஜு, 27, திலீப், 28. இவர்கள் இAவரும், 2019ல் போலீஸ் பயிற்சியை முடித்து வேலைக்காக காத்திருந்தனர்.இந்த வேளையில், இவர்களுக்கு ராம்நகர் சென்னப்பட்டணாவை சேர்ந்த கிரிஷ், 35, வந்தாரகுப்பா போலீஸ் பயிற்சி

ராம்நகர் : போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாக, 14 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.

பெங்களூரு கெங்கேரி அருகே உள்ள ராமோஹள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராஜு, 27, திலீப், 28. இவர்கள் இAவரும், 2019ல் போலீஸ் பயிற்சியை முடித்து வேலைக்காக காத்திருந்தனர்.இந்த வேளையில், இவர்களுக்கு ராம்நகர் சென்னப்பட்டணாவை சேர்ந்த கிரிஷ், 35, வந்தாரகுப்பா போலீஸ் பயிற்சி மையத்தை சேர்ந்த ரோகித், 40, சீனிவாஸ், 38 ஆகிய மூவரும் அறிமுகமாகினர்.சப் - இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி, 36 லட்சம் ரூபாய் பேரம் பேசினர். படிப்படியாக 14 லட்சம் ரூபாய் பெற்றிருந்தனர்.பணம் வாங்கி இரண்டு ஆண்டாகியும் வேலையும் வாங்கி தரவில்லை. கேட்கும்போதெல்லாம் சாக்கு போக்கு சொல்லி வந்தனர்.இதனால் கோவிந்த ராஜு, தீலீப் ஆகிய இருவரும் பணத்தை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர்.இது தொடர்பாக இருவரும் சென்னப்பட்டணா போலீசில் புகார் அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X