பொது செய்தி

இந்தியா

பயணியரின் கோரிக்கையை ஏற்று இரவு 11:30 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

Added : நவ 17, 2021
Share
Advertisement
பெங்களூரு : பயணியரின் கோரிக்கையை ஏற்று, நாளை முதல் இரவு 11:30 மணி வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.கர்நாடகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால், நவம்பர் 5 முதல் இரவு நேர ஊரடங்கை, அரசு வாபஸ் பெற்றது.ஆனாலும், மெட்ரோ ரயில் சேவை காலை 6:00 முதல், இரவு 10:00 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.இதனால், மெட்ரோ ரயில்

பெங்களூரு : பயணியரின் கோரிக்கையை ஏற்று, நாளை முதல் இரவு 11:30 மணி வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால், நவம்பர் 5 முதல் இரவு நேர ஊரடங்கை, அரசு வாபஸ் பெற்றது.ஆனாலும், மெட்ரோ ரயில் சேவை காலை 6:00 முதல், இரவு 10:00 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.இதனால், மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

:பயணியரின் கோரிக்கையை ஏற்று, நவம்பர் 18 முதல் நாகசந்திரா, சில்க் இன்ஸ்டிடியூட், கெங்கேரி மற்றும் பையப்பனஹள்ளியிலிருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 6:00.ஞாயிற்றுகிழமை காலை 7:00 மணிக்கும் புறப்படுகிறது. இரவு 11:00 மணிக்கு கடைசி ரயில் புறப்படும். அதேபோன்று, மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி ரயில் இரவு 11:30 மணிக்கு புறப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X