பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பில் சுடுகாடு மீட்டுத்தர போலீசில் புகார்

Added : நவ 17, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே தனிநபரிடம் இருந்து சுடுகாட்டை மீட்டு தரக்கோரி, ஊராட்சி தலைவர் பொதுமக்களுடன் போலீஸ் ஸ்டேஷனில் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த பரவளூர் ஊராட்சி களரங்குப்பம், எருக்கன்குப்பம், அண்ணாநகர் கிராம மக்களுக்கு மணிமுக்தா ஆற்றங்கரையில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். இதனால் கிராம
 ஆக்கிரமிப்பில் சுடுகாடு மீட்டுத்தர போலீசில் புகார்

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே தனிநபரிடம் இருந்து சுடுகாட்டை மீட்டு தரக்கோரி, ஊராட்சி தலைவர் பொதுமக்களுடன் போலீஸ் ஸ்டேஷனில் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அடுத்த பரவளூர் ஊராட்சி களரங்குப்பம், எருக்கன்குப்பம், அண்ணாநகர் கிராம மக்களுக்கு மணிமுக்தா ஆற்றங்கரையில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். இதனால் கிராம மக்கள் சடலங்களை அடக்கம் செய்ய முடியவில்லை. ஊராட்சி தலைவர் பூமாலையிடம் கிராம மக்கள் முறையிட்டனர். அவரையும் தனிநபர் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர் பூமாலை மற்றும் பொது மக்கள் விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மாலை புகார் மனு கொடுத்தனர். அதில், தனி நபரிடம் உள்ள சுடுகாட்டை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கூறபட்டிருந்தது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X