பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் - போலீஸ் தள்ளுமுள்ளு

Added : நவ 17, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் முற்றுகை போராட்டத்தின் போது, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள், போலீசாரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அ.தி.மு.க., ஆட்சியில் பழி வாங்கப்பட்டு, இடமாற்றம் செய்த தொழிலாளிகளை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்ற வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை சி.ஐ.டி.யூ., வலியுறுத்தி வருகிறது. இதையொட்டி கடலுார் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை
 கடலுாரில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் - போலீஸ் தள்ளுமுள்ளு

கடலுார் : கடலுாரில் முற்றுகை போராட்டத்தின் போது, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள், போலீசாரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அ.தி.மு.க., ஆட்சியில் பழி வாங்கப்பட்டு,

இடமாற்றம் செய்த தொழிலாளிகளை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்ற வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை சி.ஐ.டி.யூ., வலியுறுத்தி வருகிறது. இதையொட்டி கடலுார் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக சி.ஐ.டி.யூ., அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர் சங்கம் அறிவித்தது.நேற்று காலை 11 மணிக்கு சி.ஐ.டி.யூ., சம்மேளன துணைத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் தலைவர் ஜான் விக்டர், பொதுச் செயலாளர் தேவராஜூலு, கண்ணன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மண்டல அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் திரண்டனர்.பின், முற்றுகை போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் இரு தரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. பின் ஊழியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின், போக்குவரத்துக் கழக ஊழியர்கள், போராட்டத்தை 12:00 மணிக்கு கைவிட்டு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X