பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி செலுத்தியோர்...இதுவரை 7,66,731 பரிசோதனை பேருக்கு 16.74 லட்சம் பேருக்கு

Added : நவ 17, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 16.74 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 'கோவாக்சின்', 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து ஒற்றை இலக்கத்தில் உள்ளது.மாவட்டத்தில் இதுவரை 45 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்ட

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 16.74 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 'கோவாக்சின்', 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து ஒற்றை இலக்கத்தில் உள்ளது.மாவட்டத்தில் இதுவரை 45 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 356 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 45 ஆயிரத்து 529 பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது, 75 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், மாவட்டத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வாரம் தோறும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 மெகா முகாம்கள் நடத்தப்பட்டு அதற்கான கூடுதலாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் பயனடைந்தனர்.மேலும், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்டத்தில் இதுவரை 7 லட்சத்து 66 ஆயிரத்து 731 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி போடும் பணி துவங்கியது. இதுவரை 16 லட்சத்து 74 ஆயிரத்து 660 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில், தடுப்பூசி இலவசமாகவும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்துடன் தடுப்பூசி போடப்படுகிறது.விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X