சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அடுத்த கொடுக்கூர் அரசு ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளியை புதுப்பிக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில்ஈடுபட்டனர்.கண்டமங்கலம் அடுத்த கொடுக்கூரில் உள்ள பழமையான அரசு ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளி பள்ளி கட்டடங்களின் மேல்தளம் சேதமாகியுள்ளது. மழைக் காலங்களில் வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத அளவில் மழைநீர்
 அரசு பள்ளியை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அடுத்த கொடுக்கூர் அரசு ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளியை புதுப்பிக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

கண்டமங்கலம் அடுத்த கொடுக்கூரில் உள்ள பழமையான அரசு ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளி பள்ளி கட்டடங்களின் மேல்தளம் சேதமாகியுள்ளது. மழைக் காலங்களில் வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத அளவில் மழைநீர் ஒழுகுகிறது.பள்ளியை சீரமைக்கக்கோரி பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 10:00 மணியளவில் பள்ளி முன் மாணவர்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் சப் கலெக்டர் ரகுகுமார், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் தயாளன், கண்டமங்கலம் வட்டார கல்வி அலுவலர் உமாராணி ஆர். ஐ., ராஜேஷ், வி.ஏ.ஓ., அழகானந்தம், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.15 நாட்களுக்குள் ஒரு வகுப்பறைக் கட்டடத்தை மட்டும் சீரமைத்து மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்டடங்களின் தரத்தை ஆய்வு செய்து புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X