திருவண்ணாமலை பாதுகாப்பு பணிக்கு 500 போலீசார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலை பாதுகாப்பு பணிக்கு 500 போலீசார்

Added : நவ 17, 2021
Share
விழுப்புரம் : தீபத்தையொட்டி, பாதுகாப்பு பணிக்காக, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 500 போலீசார் திருவண்ணாமலைக்குச் சென்றனர்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் திருவிழா நடைபெறுவது வழக்கம். மலையில் உள்ள கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படும். இதனைக் காண பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர்
 திருவண்ணாமலை பாதுகாப்பு பணிக்கு 500 போலீசார்

விழுப்புரம் : தீபத்தையொட்டி, பாதுகாப்பு பணிக்காக, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 500 போலீசார் திருவண்ணாமலைக்குச் சென்றனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் திருவிழா நடைபெறுவது வழக்கம். மலையில் உள்ள கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படும். இதனைக் காண பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வருவர்.இந்தாண்டு, வரும் 19ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ளது.

ஆனால், கொரோனா தொற்று சூழலையொட்டி, பக்தர்கள் அனுமதிக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும், திருவண்ணாமலைக்கு வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என எஸ்.பி., ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நேற்று, திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்களை தடுத்து நிறுத்துவதற்காகவும், பாதுகாப்பு பணிக்காகவும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 500 போலீசார் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.பி., மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி.,க்கள் நீதிராஜ், கோவிந்தராஜ், 3 டி.எஸ்.பி.,க்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 500 போலீசார் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில் இருந்து நேற்று மாலை 6:00 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X