பொது செய்தி

தமிழ்நாடு

மலட்டாறு பகுதியில் கலெக்டர் ஆய்வு

Added : நவ 17, 2021
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த ஒறையூர், ரெட்டிக்குப்பம் மலட்டாறு பகுதியில் தண்ணீர் வருகை குறித்து கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். பண்ருட்டி அடுத்த ஒறையூர் ரெட்டிக்குப்பம் பகுதியில் உள்ள மலட்டாறு பகுதிக்கு 5 ஆண்டுகளுக்கு பின் கடந்த 10 நாட்களாக தண்ணீர் வருகிறது. நேற்று கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார்.அரசூர் மலட்டாற்றில் 200 அடி ஆழத்திற்கு மணல் உள்ளதால் இங்கு

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த ஒறையூர், ரெட்டிக்குப்பம் மலட்டாறு பகுதியில் தண்ணீர் வருகை குறித்து கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். பண்ருட்டி அடுத்த ஒறையூர் ரெட்டிக்குப்பம் பகுதியில் உள்ள மலட்டாறு பகுதிக்கு 5 ஆண்டுகளுக்கு பின் கடந்த 10 நாட்களாக தண்ணீர் வருகிறது.

நேற்று கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார்.அரசூர் மலட்டாற்றில் 200 அடி ஆழத்திற்கு மணல் உள்ளதால் இங்கு தடுப்பணை கட்டினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மலட்டாற்றில் தண்ணீரை அதிக நாட்கள் விட வேண்டும். மலட்டாற்றை கடைமடை வரை துார் வார வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மலட்டாறு துார் வார அரசுக்கு பரிந்துரைப்பதாக கலெக்டர் கூறினார். தொரப்பாடி அருகே கணிக்கர் குடியிருப்பு மக்கள் தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X