தமிழ்நாடு

நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்போர் எண்ணிக்கை.. அதிகரிப்பு;  வெள்ளப்பெருக்கால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Added : நவ 17, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்ட நீர் நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் அலட்சியத்தால் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, கடந்த 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை கடலுார் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டம் முழுவதும் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது, குடியிருப்பு பகுதிகள்
நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்போர் எண்ணிக்கை.. அதிகரிப்பு;  வெள்ளப்பெருக்கால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கடலுார் : கடலுார் மாவட்ட நீர் நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் அலட்சியத்தால் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, கடந்த 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை கடலுார் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டம் முழுவதும் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது, குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடானது. ஏரி, குளங்கள், அணைகட்டுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் சிதம்பரம் கொள்ளிடம் வடிநில கோட்டத்தில் உள்ள 18 ஏரிகள், விருத்தாசலம் வெள்ளாறு வடிநில கோட்டத்தில் 210 உட்பட 228 ஏரிகளில் 170 முழுமையாக நிரம்பி வழிகிறது.

அத்துடன், 40 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதமும், 20 நீர்நிலைகளில் 51 முதல் 75 சதவீதம் நிரம்பியுள்ளது.பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றுவதால் ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கடலுார் தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஓடுகிறது.

இதனால், கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரே தடுப்பணையுடன் தரைப்பாலம் வழியாக பொதுமக்கள் இறங்குவது தடை செய்யப்பட்டு, போலீசார் தடுப்பு கட்டைகள் வைத்து, பாதையை அடைத்துள்ளனர்.கடலுார் வழியாக ஓடும் கெடிலம் ஆற்றில் வினாடிக்கு 3,266 கன அடியும், கொள்ளிடத்தில் 18 ஆயிரம் கனஅடி, வெள்ளாற்றில் 5000 கனஅடியும், மேல்பரவனாற்றில் 1300 கனஅடியும், கீழ்பரவனாற்றில் வினாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் செல்கிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து,

ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முக்கிய நீர்நிலை பகுதிகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என போலீசார் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மாவட்டத்தில் பல இடங்களில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்திற்குள் சிதம்பரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் அட்சயா, 17; மணி மகள் அனுஷியா, கொடியன்பாளையத்தை சேர்ந்த 15 வயது பெண் ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

பண்ருட்டி கோழிப்பாக்கத்தை சேர்ந்த சின்னராசு, 23; பகண்டை தென் பெண்ணையாற்றிலும், பெரியப்பட்டில் 2 வயது குழந்தை சஞ்சய், நிலத்தில் தேங்கியிருந்த மழைநீரிலும், சிதம்பரம் அக்கரைஜெயங்கொண்டபட்டினம் செல்வராஜ், 65; கொள்ளிடம் ஆற்றிலும், நடுவீரப்பட்டு ராஜேந்திரன், 54; பாலுார் கெடிலம் ஆற்றிலும், பண்ருட்டி பெரிய எலந்தம்பட்டு வினித், 25; கம்மாபுரம் அடுத்த பெரியகோட்டுமுளை விக்ரமன், 16; ஆகியோர் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்தனர். கடந்த 14ம் தேதி நெல்லிக்குப்பம் அருகே பெண்ணையற்று வெள்ளத்தில் மூழ்கி இரட்டையர்களான மாதவன், 21, மாளவிகா,21; மற்றும் லோகேஷ்,18; இறந்தனர்.

நேற்று முன்தினம் விருத்தாசலம் டி.மாவிடந்தல் கிராமத்தை சேர்ந்த நஜீம், 22; பண்ருட்டி சோமாசிபாளையம் அய்யப்பன், 21; நேற்று பெண்ணாடம்அருகே மாணவர் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் நீர்நிலைகளில் மூழ்கி இறந்துள்ளனர். நீர்நிலைகள் வேகமாக நிரம்புவதாலும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளை கடந்து செல்லவோ, குளிப்பதையோ தவிர்க்க வேண்டும் என, எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X