பொது செய்தி

தமிழ்நாடு

பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள்... கவலை; இழப்பீடு கிடைக்குமா என எதிர்பார்ப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் சாகுபடி செய்யப்பட்ட நெல், மக்காச்சோளம் மற்றும் கரும்பு என 401 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கல்வராயன்மலையில் 140க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய வாழ்வாதார தொழிலாக உள்ளது. இங்கு மரவள்ளி, மக்காச்சோளம், கேழ்வரகு, நெல்,
பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள்... கவலை;   இழப்பீடு கிடைக்குமா என எதிர்பார்ப்பு

கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் சாகுபடி செய்யப்பட்ட நெல், மக்காச்சோளம் மற்றும் கரும்பு என 401 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கல்வராயன்மலையில் 140க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய வாழ்வாதார தொழிலாக உள்ளது. இங்கு மரவள்ளி, மக்காச்சோளம், கேழ்வரகு, நெல், கரும்பு, பருத்தி, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.கல்வராயன்மலை பகுதியில் 3,330 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர், 112 ஏக்கர் பரப்பளவில் கரும்பு, 150 ஏக்கர் பரப்பளவில் பருத்தி, 2,250 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.கல்வராயன்மலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து வெள்ளிமலை, உப்பூர், வாரம், கெண்டிக்கல், வாழப்பாடி, முண்டியூர், மணியார்பாளையம், அருவங்காடு, சேராப்பட்டு உட்பட பல்வேறு கிராமங்களில் 113 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள், 63 ஏக்கர் கரும்பு, 225 ஏக்கர் மக்காச்சோளம் என 401 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.குறிப்பாக நெற்பயிர்கள் கதிர் முற்றிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளதால் நெல் மணிகள் தற்போது முளைக்கத் துவங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்களுக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு கலெக்டர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X