பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
திண்டிவனம் ; கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி திண்டிவனத்தில் கல்லுாரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.அரசு கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வை கல்லுாரிகளில் நடத்துவதற்கு அரசு ஏற்பாடுசெய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து
 கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

திண்டிவனம் ; கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி திண்டிவனத்தில் கல்லுாரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.அரசு கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வை கல்லுாரிகளில் நடத்துவதற்கு அரசு ஏற்பாடுசெய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கல்லுாரி வளாகத்தில் நடந்த போராட்டத்தில் நுாற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, ஆன் லைனில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

திருவெண்ணெய்நல்லுார்அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் திருவெண்ணெய்நல்லுார் - திருக்கோவிலுார் சாலை சின்னசெவலை பஸ் நிறுத்தம் அருகே நேற்று மதியம் 12:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.சப் இன்ஸ்பெக்டர்கள் குருபரன், பாலசிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் 2:00 மணியளவில் மறியலை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X