நடிகர் சூர்யா படம் பா.ம.க.,வினர் எரிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகர் சூர்யா படம் பா.ம.க.,வினர் எரிப்பு

Added : நவ 17, 2021
Share
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நடிகர் சூர்யா உருவப்படத்தை பா.ம.க., வினர் தீயிட்டு எரித்ததால் பரபரப்பு நிலவியது. நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளன. இதனை கண்டிப்பதாக கூறி பா.ம.க., கடலுார் மேற்கு மாவட்டம் சார்பில், விருதாச்சலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட
 நடிகர் சூர்யா படம் பா.ம.க.,வினர் எரிப்பு

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நடிகர் சூர்யா உருவப்படத்தை பா.ம.க., வினர் தீயிட்டு எரித்ததால் பரபரப்பு நிலவியது. நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளன.

இதனை கண்டிப்பதாக கூறி பா.ம.க., கடலுார் மேற்கு மாவட்டம் சார்பில், விருதாச்சலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நகர செயலர் விஜயகுமார், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேலு, மாநில மகளிர் அணி செயலர் சிலம்புச்செல்வி, மாவட்ட மகளிரணி செயலர் சத்தியாபானு, மாவட்ட இளைஞரணி ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அப்போது பா.ம.க., வினர் சூர்யாவின் படத்தை தீயிட்டு எரித்தனர். அங்கிருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X