பொது செய்தி

தமிழ்நாடு

கடமை தவறிய தி.மு.க., அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு

Added : நவ 17, 2021
Share
Advertisement
கடலுார் : 'மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையில் இருந்து தி.மு.க., அரசு தவறி விட்டது' என, எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.கடலுார் மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளை எதிர் கட்சித் தலைவர் பழனிசாமி,அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.புவனகிரி அடுத்த பூவாலை கிராமத்தில் கரடு முரடான பாதையில் காரில் செல்ல முடியாத நிலை
 கடமை தவறிய தி.மு.க., அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு

கடலுார் : 'மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையில் இருந்து தி.மு.க., அரசு தவறி விட்டது' என, எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.கடலுார் மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளை எதிர் கட்சித் தலைவர் பழனிசாமி,அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

புவனகிரி அடுத்த பூவாலை கிராமத்தில் கரடு முரடான பாதையில் காரில் செல்ல முடியாத நிலை இருந்தது.இதையடுத்து, ஜீப் மூலம் சென்று, விவசாய பயிர்கள் பாதிக்க காரணமான பரவனாற்று கரை பகுதியை பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது, பரவனாற்றை விரைவில் துார்வாரிமழை பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கைவைத்தனர்.இதையடுத்து பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் சிதம்பரம் மற்றும் புவனகிரியில் மழையால் பாதித்த பொது மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு துணி, பாய், அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர்.அப்போது எதிர்கட்சி தலைவர் பழனிசாமி கூறுகையில், 'மழை பாதிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முறையாக மேற்கொள்ளவில்லை. அரசின் அலட்சியத்தால் தமிழகம் முழுதும் மழையால் மக்கள் பாதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை அரசு நிவாரணம் வழங்கவில்லை.

கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், மழை, வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கினோம்.ஆட்சியில் 10 நாட்களோ, 10 மாதங்களோ இருந்தாலும் மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசு, மக்களுக்கான கடமையை செய்ய தவறிவிட்டது. எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், சம்பத், மாவட்ட செயலாளர்கள் பாண்டியன் எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., சொரத்துார் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முருகுமாறன், அருள், செல்வி ராமஜெயம்உடனிருந்தனர்.கடலுார் மாவட்டத்தை பார்வையிட்ட பின், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பாதிப்புகளை பார்வையிட புறப்பட்டுச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X