சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அம்மன் சிலை சேதம்: போலீஸ் விசாரணை

Added : நவ 17, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அருகே அம்மன் சுவாமி சிலையை சேதப்படுத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலை விரிவாக்கப் பணிக்காக, சில மாதங்களுக்கு முன் சாலையோரம் இருந்த கோவில்கள் அகற்றப்பட்டன.இதில், விழுப்புரம் அடுத்த மழவராயனுார் ஊராட்சிக்குட்பட்ட சுந்தரிபாளையம் கிராமத்தில் இருந்த முத்துமாரியம்மன் கோவிலும்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே அம்மன் சுவாமி சிலையை சேதப்படுத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலை விரிவாக்கப் பணிக்காக, சில மாதங்களுக்கு முன் சாலையோரம் இருந்த கோவில்கள் அகற்றப்பட்டன.

இதில், விழுப்புரம் அடுத்த மழவராயனுார் ஊராட்சிக்குட்பட்ட சுந்தரிபாளையம் கிராமத்தில் இருந்த முத்துமாரியம்மன் கோவிலும் அகற்றப்பட்டது.இதையடுத்து, தற்போது அங்கு, கிராம மக்கள் சார்பில், புதிதாக முத்துமாரியம்மன் கோவில் கட்டும் பணி நடக்கிறது.இந்த கோவிலின் கோபுரம் மீது அமைக்கப்பட்டிருந்த அம்மன் சிலையை மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு சேதப்படுத்தியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார், சுவாமி சிலையை சேதப்படுத்திய நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X