அணைக்கட்டு இடிபாடுகள் அகற்றும் பணியில் தொய்வு

Added : நவ 17, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த தளவானுாரில், வெடி வைத்து தகர்க்கப்பட்ட அணைக்கட்டின் இடிபாடுகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், தளவானுார் மற்றும் கடலுார் மாவட்டம், எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 2020ல் அ.தி.மு.க., ஆட்சியில் 25.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டப்பட்டது.தொடர் வெள்ளத்தால் அணை சேதமானதால், இரண்டு

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த தளவானுாரில், வெடி வைத்து தகர்க்கப்பட்ட அணைக்கட்டின் இடிபாடுகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், தளவானுார் மற்றும் கடலுார் மாவட்டம், எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 2020ல் அ.தி.மு.க., ஆட்சியில் 25.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டப்பட்டது.தொடர் வெள்ளத்தால் அணை சேதமானதால், இரண்டு நாட்களாக வெடி வைத்து அணையை தகர்த்தனர். இடிபாடுகளை அகற்ற, தண்ணீரில் மிதக்கும் மூன்று மிதவை ஹிட்டாச்சி இயந்திரங்கள் நேற்று வரவழைக்கப்பட்டன. அதில், ஒரு இயந்திரத்தை காலை 11:00 மணிக்கு ஆற்றில் இறக்கினர்.இதற்கிடையே, சாத்தனுார் அணையில் இருந்து வினாடிக்கு 3,800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், சேதமடைந்த பகுதிகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. தண்ணீரில் சிக்கி, மிதவை ஹிட்டாச்சி இயந்திரம் தடுமாறியது.அணையின் கான்கிரீட் சுவரை அணைத்தபடி மிதவை நிறுத்தப்பட்டது. 'தண்ணீர் வரத்து குறைந்தவுடன், பணிகள் மீண்டும் துவங்கும்' என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X