பொது செய்தி

தமிழ்நாடு

விருப்ப இடமாறுதல் உத்தரவால் கவுரவ விரிவுரையாளர்கள் அச்சம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
மதுரை : 'அரசுக் கலை கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணிப் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.பல்கலைகளின் கீழ் செயல்பட்ட 41 உறுப்புக் கல்லுாரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளாக அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 14ம், இரண்டாம் கட்டமாக 27ம் அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்டன.இக்கல்லுாரிகளில் 80 சதவீதம் கவுரவ

மதுரை : 'அரசுக் கலை கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணிப் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல்கலைகளின் கீழ் செயல்பட்ட 41 உறுப்புக் கல்லுாரிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளாக அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 14ம், இரண்டாம் கட்டமாக 27ம் அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்டன.இக்கல்லுாரிகளில் 80 சதவீதம் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். இவர்கள் பணிநிரந்தரம் ஆகும் என்ற நம்பிக்கையில்உள்ளனர்.

இந்நிலையில் பிற அரசு கல்லுாரிகளில் இருந்து இக்கல்லுாரிகளுக்கு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படுவதால் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு உறுப்புக் கல்லுாரிகள் கவுரவ விரிவுரையாளர்சங்கம் மாநில தலைவர் கதலிநரசிங்க பெருமாள் கூறியதாவது:

கவுரவ விரிவுரையாளர்களுக்கு யு.ஜி.சி., தகுதி உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய, பி.எச்.டி., தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளரை நிரந்தரம் செய்ய அ.தி.மு.க., ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.அப்பணிகளை இந்த ஆட்சியிலும் தொடர்ந்து மேற்கொண்டு தகுதியுள்ளவர்களுக்கு நிரந்தர பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X