பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் குழந்தைகள் தினவிழா

Added : நவ 17, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் தினவிழா தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது.மாணவி சுவேதா வரவேற்றார், கொடிமங்கலம் அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியைகள் இந்துமதி, ராணி, நாகேஸ்வரி, விஜயசாரதி ஏற்பாடு செய்தனர். மாணவி ஆதிலட்சுமி தொகுத்து

மதுரை : மதுரை வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் தினவிழா தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது.மாணவி சுவேதா வரவேற்றார், கொடிமங்கலம் அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியைகள் இந்துமதி, ராணி, நாகேஸ்வரி, விஜயசாரதி ஏற்பாடு செய்தனர். மாணவி ஆதிலட்சுமி தொகுத்து வழங்கினார். மதுரை தானம் அறக்கட்டளை விழாவில் மாணவர்களுக்கு அவ்வையார் எழுதிய ஆத்திசூடி புத்தகம் வழங்கி, மாதம் தோறும் அறநுால் வழங்கும் திட்டத்தை பட்டறிவு பதிப்பகம் துவங்கியது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மகரிஷி வித்யா மந்திர் பள்ளி முதல்வர் விஜயலட்சுமி, துணை முதல்வர் ஹேமவித்யா, பட்டறிவு பதிப்பக முதன்மை நிர்வாகி வெங்கடேசன், மண்வாசம் இதழ் ஆசிரியர் ப.திருமலை, கருணை இல்ல கண்காணிப்பாளர் அன்பு பங்கேற்றனர். கல்வி ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.மேலுார்கீழவளவு, பேய்ப்பனையம்பட்டியில் சோமசுந்தர விநாயகர் கோயில் நிர்வாகிகள் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. கோயில் நிர்வாகி கணேசன் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு நுால்கள் பரிசாக வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X