பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை எல்லீஸ்நகர் நடைபாதைகடைகளை அகற்ற வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : நவ 17, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை எல்லீஸ் நகரில் நடைபாதை கடைகளை அகற்ற மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை எல்லீஸ் நகர் பஸ் ஸ்டாண்ட் எதிரே நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கடைகளை அகற்றக்கோரி கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட

மதுரை : மதுரை எல்லீஸ் நகரில் நடைபாதை கடைகளை அகற்ற மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:

மதுரை எல்லீஸ் நகர் பஸ் ஸ்டாண்ட் எதிரே நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கடைகளை அகற்றக்கோரி கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

பெரியார் பஸ் ஸ்டாண்ட் - பாரதியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் ஒருங்கிணைந்த வணிகர்கள் நலச் சங்கம் தரப்பு தாக்கல் செய்த மனு: பெரியார் பஸ் ஸ்டாண்டில் 446 கடைகள் இருந்தன. அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணி நடக்கிறது. பணி நிறைவடையும்வரை நகரில் எங்கெங்கு காலி இடம் உள்ளதோ அங்கு தற்காலிக அடிப்படையில் எங்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்ய மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் 2018 ல் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் எல்லீஸ்நகரில் 46 பேருக்கு தற்காலிக கடைகள் ஒதுக்கப்பட்டன. அந்த உத்தரவை மறைத்து மனுதாரர் இந்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளார். அதை ரத்து செய்து கடைகளை திறக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டது. நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு விசாரித்தது.மாநகராட்சி தரப்பு அனுமதியற்ற 71 கடைகள் அகற்றப்பட்டன.

கொரோனாவால் அகற்றும் பணி பாதித்துள்ளது. அனுமதியற்ற 92 கடைகளை அகற்ற அவகாசம் தேவை என தெரிவித்தது. நீதிபதிகள்: எல்லீஸ்நகரில் நடைபாதை கடைகளை அகற்றி மாநகராட்சி தரப்பில் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X