பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்; தண்ணீர் மனிதர் வலியுறுத்தல்

Added : நவ 17, 2021
Share
Advertisement
மதுரை : நீர்நிலைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இன்றைய மாணவர்கள் முன்வர வேண்டும் என மதுரை மீனாட்சி அரசு பெண்கள் கல்லுாரியில் நடந்த பயிலரங்கில் இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங் வலியுறுத்தினார்.முதல்வர் வானதி தலைமை வகித்தார். நீர் மேலாண்மை மற்றும் நீர் சார்ந்த சுற்றுபயணம் குறித்து வீடியோ மூலம் ராஜேந்திரசிங் விளக்கினார். அவர் பேசுகையில், ''நீர்

மதுரை : நீர்நிலைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இன்றைய மாணவர்கள் முன்வர வேண்டும் என மதுரை மீனாட்சி அரசு பெண்கள் கல்லுாரியில் நடந்த பயிலரங்கில் இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங் வலியுறுத்தினார்.

முதல்வர் வானதி தலைமை வகித்தார். நீர் மேலாண்மை மற்றும் நீர் சார்ந்த சுற்றுபயணம் குறித்து வீடியோ மூலம் ராஜேந்திரசிங் விளக்கினார். அவர் பேசுகையில், ''நீர் பாராளுமன்றம் அமைத்து நீர் ஆதாரங்களை புனரமைக்க வேண்டும்'' என்றார்.உத்தரபிரதேச நீர் மேலாண்மை நிபுணர் சஞ்சய் ராணா, தமிழக ஆறுகள் வள மீட்டு குழு தலைவர் குருசாமி, நீர் மேலாண்மை இணை ஒருங்கிணைப்பாளர் துரை விஜயபாண்டியன், தண்ணீர் தண்ணீர் அறக்கட்டளை நிர்வாகிகள் உச்சிமகாலிங்கம், ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக வண்டியூர் கண்மாயை ராஜேந்திரசிங் பார்வையிட்டார். வண்டியூர் நடையாளர் கழக நிர்வாகிகள் ராஜ்குமார், பொன்ராஜன், கணேஷ் பங்கேற்றனர். ஒளிரும் மதுரை சார்பில் ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X