பொது செய்தி

தமிழ்நாடு

58 கிராம கால்வாயில் தண்ணீர்

Added : நவ 17, 2021
Share
Advertisement
உசிலம்பட்டி : வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உசிலம்பட்டி பகுதியில் பாறைப்பட்டி, உ.புதுக்கோட்டை கண்மாய் பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதனை வரவேற்கும் விதமாக உத்தப்பநாயக்கனூர் அருகே கிளைக்கால்வாய்கள் அமைந்துள்ள பகுதியில் அ.தி.மு.க., வினர் சார்பில் 58 பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. முன்னாள் அமைச்சர் உதயகுமார், எம்.எல்.ஏ., அய்யப்பன்,

உசிலம்பட்டி : வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உசிலம்பட்டி பகுதியில் பாறைப்பட்டி, உ.புதுக்கோட்டை கண்மாய் பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது.

இதனை வரவேற்கும் விதமாக உத்தப்பநாயக்கனூர் அருகே கிளைக்கால்வாய்கள் அமைந்துள்ள பகுதியில் அ.தி.மு.க., வினர் சார்பில் 58 பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. முன்னாள் அமைச்சர் உதயகுமார், எம்.எல்.ஏ., அய்யப்பன், நிர்வாகிகள் பண்பாளன், துரைதனராஜ், ராஜா, மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:

தி.மு.க., சார்பில் இத்திட்டம் துவக்கப்பட்டாலும், வீராணம் திட்டம் போல இதனை கைவிட்டனர். அதனை புதிய வீராணம் திட்டமாக கொண்டு வந்து சாதித்துக்காட்டியது அ.தி.மு.க., அரசு. 58 கிராம கால்வாய் திட்டத்தினை முழுமையடைய நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றி மூன்று முறை சோதனை ஓட்டமும் நடத்தியது அ.தி.மு.க., அரசு. வரும் காலத்தில் அணையில் 62 அடியாக இருக்கும் போது தண்ணீர் கொண்டுவரக் கூடிய வகையில் போராடுவோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X