தமிழ்நாடு

மாணவர்களை போராட தூண்டும் சிலரை கைது செய்ய முடிவு

Added : நவ 17, 2021
Share
Advertisement
மதுரை : கல்லுாரிகளில் நேரடி தேர்வு மட்டுமே நடக்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில், ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மாணவர்களை போராட துாண்டும் சிலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லுாரி வகுப்புகள் ஆன்லைனில் நடந்தன. சில தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வால் தற்போது நேரடி தேர்வு நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு
 மாணவர்களை போராட தூண்டும் சிலரை கைது செய்ய முடிவு

மதுரை : கல்லுாரிகளில் நேரடி தேர்வு மட்டுமே நடக்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில், ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மாணவர்களை போராட துாண்டும் சிலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லுாரி வகுப்புகள் ஆன்லைனில் நடந்தன. சில தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வால் தற்போது நேரடி தேர்வு நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில கல்லுாரி மாணவர்கள் இருநாட்களாக தொடர்ந்து மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் நேரடி தேர்வுதான் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதை ஏற்காமல் தொடர்ந்து மாணவர்களை போராட துாண்டும் வகையில் சில அமைப்பினர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களின் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயர்கல்வித்துறை விளக்கத்தை ஏற்று மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை துாண்டும் மாணவர்கள் அடையாளம் கண்டு கைதுசெய்யப்படுவர் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X