சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண் வெட்டியுடன் விவசாயிகள் முற்றுகை

Added : நவ 17, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் 1, 2 பிட் பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்களை அகற்றக்கோரி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.அப்பகுதிகளில் தற்போது 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் சம்பா பருவ நெல் பயிரிடப்பட்டுள்ளது. அப்பகுதி நிலங்களுக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்கள்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் 1, 2 பிட் பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்களை அகற்றக்கோரி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

அப்பகுதிகளில் தற்போது 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் சம்பா பருவ நெல் பயிரிடப்பட்டுள்ளது. அப்பகுதி நிலங்களுக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதால் பயிர்கள் கருகுகின்றன. பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனக்கோரி அப்பகுதி விவசாயிகள் மண்வெட்டிகளுடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் தாசில்தார் சரவணன், ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X