சிறப்பு ரயில்கள் ரத்தால் 15 சதவீதம் ரயில் பயண கட்டணம் குறைகிறது!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிறப்பு ரயில்கள் ரத்தால் 15 சதவீதம் ரயில் பயண கட்டணம் குறைகிறது!

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களை, மீண்டும் பழைய பெயரிலேயே இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனால் பயண கட்டணம் 15 சதவீதம் வரை குறையும்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பின் புலம்பெயர்ந்த தொழிலாளர் உள்ளிட்டோரின் வசதிக்காக தனி ரயில்கள் இயக்கப் பட்டன. அதைத் தொடர்ந்து, உள்நாட்டு பயண சேவைகள்,
IRCTC, Indian Railway, Railways

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களை, மீண்டும் பழைய பெயரிலேயே இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனால் பயண கட்டணம் 15 சதவீதம் வரை குறையும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பின் புலம்பெயர்ந்த தொழிலாளர் உள்ளிட்டோரின் வசதிக்காக தனி ரயில்கள் இயக்கப் பட்டன. அதைத் தொடர்ந்து, உள்நாட்டு பயண சேவைகள், படிப்படியாக துவக்கப்பட்டன. அப்போது ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்கள், சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில் சிறப்பு ரயில்கள் அனைத்தையும் மீண்டும் பழைய பெயரிலேயே இயக்கும் படி அனைத்து மண்டலங்களுக்கும், ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 1,700 சிறப்பு ரயில்கள் மீண்டும் பழைய பெயரிலேயே இயங்க உள்ளன. இதனால் இந்த ரயில்களுக்கான கட்டணம், 15 சதவீதம் வரை குறைந்து, பழைய கட்டணமே வசூலிக்கப்பட உள்ளது.

இந்த மாற்றங்களை செய்வதற்காக, ரயில்வே இணையதளம் அடுத்த ஒரு வாரத்துக்கு தினமும் ஆறு மணி நேரம் செயல்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் ரயில்களில் உணவு வழங்குவது நிறுத்தம், பிளாட்பார டிக்கெட் விலை உயர்வு, நேரடி டிக்கெட் விற்பனைக்கான தடை ஆகியவை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X