பொது செய்தி

தமிழ்நாடு

காட்டுப்பன்றிகளால் ரூ.8 லட்சம் இழப்பு; ரூ. 8 லட்சம் இழப்பை சந்தித்த விவசாயிகள்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சிவகாசி : சிவகாசி அருகே காட்டு பன்றிகளால் 40 ஏக்கர் மக்காச்சோளம் பயிர் சேதமாக்கப்பட்ட நிலையில், ரூ. 8 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.சிவகாசி சித்தமநாயக்கன்பட்டி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம் முக்கிய விவசாயமாக உள்ளது. சித்தமநாயக்கன்பட்டியில் மட்டும் விவசாயிகள் 180 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். அறுவடைக்கு ஒன்றரை

சிவகாசி : சிவகாசி அருகே காட்டு பன்றிகளால் 40 ஏக்கர் மக்காச்சோளம் பயிர் சேதமாக்கப்பட்ட நிலையில், ரூ. 8 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

சிவகாசி சித்தமநாயக்கன்பட்டி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம் முக்கிய விவசாயமாக உள்ளது. சித்தமநாயக்கன்பட்டியில் மட்டும் விவசாயிகள் 180 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். அறுவடைக்கு ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் மக்காச்சோளத்தினை சேதமாக்கி உள்ளது.40 ஏக்கரில் உள்ள மக்காச்சோள பயிர்கள் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

ஏக்கருக்கு உழவு, விதைப்பு, உரமிடுதல் என ரூ. 20 ஆயிரம் வரை செலவழித்து உள்ளனர். இதன் மூலம் ரூ. 8 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதமாகி உள்ளதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தால் அவதிப்படுகின்றனர். பன்றிகளை ஒழிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

.சித்தமநாயக்கன்பட்டி விவசாயி கந்தசாமி: 2 ஏக்கரில் மக்காச்சோளம் விதைத்திருந்தேன். அறுவடைக்கு ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் ஒரு ஏக்கர் பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் பெருத்த நஷ்டம் ஏற்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X