பொது செய்தி

தமிழ்நாடு

தாய் சேய் நல இலவச ஊர்தி சேவை முடக்கம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சிவகங்கை : சுகாதாரத் திட்டத்தில் இலவசமாக செயல்பட்டு வந்த தாய்சேய் நல வாகனம், அமரர் ஊர்தி முடக்கப்படுவதாக ஊழியர்கள் கலெக்டர் மதுசூதனரெட்டியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பதாவது: அரசு மருத்துவ மனைகளில் உள்ள நோயாளிகள் இறக்கும் போது அவர்களது உடலை இலவசமாக எடுத்து செல்ல அமரர் ஊர்தி திட்டம் 2011 ல் செயல்படுத்தப்பட்டது.

சிவகங்கை : சுகாதாரத் திட்டத்தில் இலவசமாக செயல்பட்டு வந்த தாய்சேய் நல வாகனம், அமரர் ஊர்தி முடக்கப்படுவதாக ஊழியர்கள் கலெக்டர் மதுசூதனரெட்டியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பதாவது: அரசு மருத்துவ மனைகளில் உள்ள நோயாளிகள் இறக்கும் போது அவர்களது உடலை இலவசமாக எடுத்து செல்ல அமரர் ஊர்தி திட்டம் 2011 ல் செயல்படுத்தப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு இலவச சேவையாக தாய்சேய் நல ஊர்தி 2015 முதல் இலவசமாக இயக்கப்பட்டு வந்தது.இத்திட்டத்தை செஞ்சிலுவை சங்கத்தினர் நிர்வகித்து வந்தனர். 2021ஆகஸ்டில் செஞ்சிலுவை சங்கம் இத்திட்டத்திலிருந்து வெளியேறியது.அதன் பின்னர் மாநில சுகாதார திட்ட இயக்குனர் பேச்சுவார்த்தையின் மூலம் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக 2021 அக்டோபர் முதல் ஜி.வி.கே., நிறுவனம் தற்காலிகமாக இத்திட்டத்தினை செயல்படுத்தும் என்று தெரிவித்தனர். ஜி.வி.கே., நிறுவனம் இந்த இரு திட்டங்களையும் முடக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. ஓவர் டைம் சம்பளம், பயணப்படியை ரத்து செய்தது. போனஸ். ஊக்கத்தொகை வழங்கியதில் முறைகேடு செய்து வருகிறது.இதில் உள்ள வாகனங்களை பழுது, பராமரிப்பு பணிகளை செய்வதில்லை. இந்த வாகனங்களில்செல்லும் பயனாளிகள், ஓட்டுநர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.தமிழகத்தில் அமரர் ஊர்தி 250 வாகனங்களில் தற்போது 150 வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. தாய்சேய் நல ஊர்தி 210 வாகனங்களில் 80 வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் இல்லாத நிலையில் நோயாளிகள் வாடகை வாகனங்களை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இத்திட்டங்களை முடக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஜி.வி.கே., நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் அரசே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஊழியர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X