திடக்கழிவு மேலாண்மை புஸ்: குப்பைக்கிடங்கான வைப்பாறு; கொசுக்களால் அவதிப்படும் மருதுபாண்டியர் நகர் மக்கள்

Added : நவ 17, 2021
Share
Advertisement
சாத்துார் : திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப் படாததால் குப்பை கிடங்கான வைப்பாற்றில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் படந்தால் மருதுபாண்டியர் நகரில் உள்ள மக்கள் தவியாய் தவிக்கின்றனர்.மருதுபாண்டியர் நகர் குடியிருப்போர் நலசங்க தலைவர் அய்யப்பன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் கும்கி கார்த்திக், உறுப்பினர்கள் மணிவண்ணன், சங்கர் பாண்டியன்,

சாத்துார் : திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப் படாததால் குப்பை கிடங்கான வைப்பாற்றில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் படந்தால் மருதுபாண்டியர் நகரில் உள்ள மக்கள் தவியாய் தவிக்கின்றனர்.

மருதுபாண்டியர் நகர் குடியிருப்போர் நலசங்க தலைவர் அய்யப்பன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் கும்கி கார்த்திக், உறுப்பினர்கள் மணிவண்ணன், சங்கர் பாண்டியன், ஹரிகிருஷ்ணன், ஆறுமுகம் கூறியதாவது:மருதுபாண்டியர் நகருக்கு வரும் வழியில் மெயின்ரோட்டில் உள்ள பிரதான சாக்கடையில் மணலை கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் சாக்கடை கழிவுநீர் மட்டுமின்றி மழைநீரும் செல்வது பாதிக்கப்பட்டுள்ளது.15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சாக்கடைகளில் சிமென்ட் பூச்சு கரைந்து கற்கள் பெயர்ந்து உள்ளன. நகரின் அருகில்தான் வைப்பாறு ஒடுகிறது. வைப்பாற்றின் கரைப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டிற்கு வருவதாக கூறினர் ஆனால் வரவில்லை. தற்போது ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை இங்கு கொட்டுகின்றனர்.

இதில் தீ யையும் வைக்கின்றனர். குடியிருப்பு பகுதியில் புகை சூழ்ந்து விடுகிறது.ரோடு, சாக்கடை உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை. தற்போது நகரில் தார் சாலைகள், பேவர் பிளாக் பணிகளை செய்து வருகின்றனர். சில தெருக்களில் பாதி அளவு மட்டுமே பேவர் பிளாக், சிமென்ட் ரோடு போடப்பட்டுள்ளது.பாதியளவில் குறையாக நிற்கும் பணிகளை விரைவாக முடிக்க ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நிதி வரவும் செய்து தருவதாக கூறி உள்ளனர்.மத்தியரசின் ஜல் ஜீவன் சக்தி திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிகுழாய் இணைப்பு வழங்கி உள்ளனர். ஆனால் வாரம் ஒரு முறை 2 மணிநேரமே குடிநீர் வருகிறது. மொத்தமாக தண்ணீரை பிடித்து வைத்தால் கொசு உற்பத்தியாகி டெங்கு, ஏற்படுகிறது.

தீப்பெட்டி, பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இப்பகுதியில் அதிகளவில் வசிக்கின்றனர். கொசு புழு உருவாவதை தவிர்க்க அவர்கள் தினமும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.தினமும் காலை 6:00 மணிக்கு 30 நிமிடம் குடிநீரை குழாய் மூலம் வழங்கினால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். கொசு புழுவும் உற்பத்தியாகாது.மக்களின் புழக்கத்திற்காக மினி பவர் பம்புடன் தொட்டிகள் அமைத்துள்ளனர். ஆனால் இவை செயல்படவில்லை.பழுதான மோட்டார்களை சரி செய்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.வைப்பாற்றின் கரையில் உள்ள சுடுகாட்டு ரோட்டை பலரும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.

சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மருதுபாண்டியர் நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.பல ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பில் பொதுமக்கள் துணி துவைக்க, குளிப்பதற்காக படித்துறை கட்டப்பட்டது . தற்போது முள்செடி முளைத்து செயல்படுத்த முடியாத வகையில் பாழடைந்துள்ளது. மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் படித்துறை பயன்படுத்தும் சலவை தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.வைப்பாற்றின் கரையில் குப்பையை திறந்தவெளியில் கொட்டி வருகின்றனர். இவை காற்றுக்கு பறந்து சுகாதார க்கேடு ஏற்படுகிறது. காம்பவுண்ட் சுவருடன் குப்பை கிடங்கு கட்டவேண்டும்.இதற்கு தேவையான நிதியை ஊராட்சிக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X