கழிவுநீரில் மிதக்கும் காளவாய் பொட்டல் ; சுகாதார கேட்டால் மக்கள் அவதி| Dinamalar

கழிவுநீரில் மிதக்கும் காளவாய் பொட்டல் ; சுகாதார கேட்டால் மக்கள் அவதி

Added : நவ 17, 2021
Share
காரைக்குடி : காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட காளவாய் பொட்டல் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து கழிவுநீராக தேங்கியுள்ளதால் சுகாதார கேட்டில் மக்கள் தவிக்கின்றனர்.இந்நகராட்சி 28 வது வார்டில் காளவாய் பொட்டல் உட்பட பல்வேறு நகர் பகுதிகளில் 1000 குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவ மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

காரைக்குடி : காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட காளவாய் பொட்டல் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து கழிவுநீராக தேங்கியுள்ளதால் சுகாதார கேட்டில் மக்கள் தவிக்கின்றனர்.

இந்நகராட்சி 28 வது வார்டில் காளவாய் பொட்டல் உட்பட பல்வேறு நகர் பகுதிகளில் 1000 குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவ மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் இந்த தெருக்கள் உள்ளன.மேலும் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக்கேட்டில் மக்கள் தவிக்கின்றனர்.வீடுகளை சூழ்ந்த மழைநீர் செல்வி, காளவாய் பொட்டல்: இங்கு அடிப்படை வசதியின்றி தவிக்கிறோம்.

கடந்த மாதம் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடந்தது. ஒரு பக்க சுவர் மட்டுமே கட்டியதால் மழைக்கு கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் புகுந்தது. நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. தற்போது பெய்யும் மழையால் வீடுகளில் மழை நீர் சுழ்ந்துள்ளன. அவற்றை அகற்ற நகராட்சியினர் அக்கறை செலுத்தவில்லை.

காய்ச்சலால் தவிப்பு

ராஜராமன், பா.ஜ., நிர்வாகி, காரைக்குடி: குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீரால் விஷசந்துக்கள் வீடுகளுக்குள் புகுகின்றன. நகராட்சியினர் கடந்த 5 நாட்களாக மோட்டார் மூலம் கழிவு நீரை அகற்றினர். ஆனால் தேங்கிய கழிவுநீர் குறையவில்லை. காய்ச்சல் தொற்றால் தவிக்கிறோம் என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X