பொது செய்தி

தமிழ்நாடு

சிறந்த தாசில்தார்களுக்கு பரிசு

Added : நவ 17, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தாசில்தார்களுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி பரிசு வழங்கி கவுரவித்தார்.அதன்படி சிறப்பாக பணியாற்றியதற்கான முதல் பரிசை சாத்துார் முன்னாள் தாசில்தார் வெங்கடேஷ், 2ம் பரிசை சிவகாசி தாசில்தார் ராஜகுமார், 3ம் பரிசை வத்திராயிருப்பு மாதா, தனி

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தாசில்தார்களுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி பரிசு வழங்கி கவுரவித்தார்.

அதன்படி சிறப்பாக பணியாற்றியதற்கான முதல் பரிசை சாத்துார் முன்னாள் தாசில்தார் வெங்கடேஷ், 2ம் பரிசை சிவகாசி தாசில்தார் ராஜகுமார், 3ம் பரிசை வத்திராயிருப்பு மாதா, தனி தாசில்தார்களில் முதல் பரிசை சிவகாசி ஆனந்தராஜ், 2ம் பரிசை வத்திராயிருப்பு சையது இப்ராகிம்சா, 3ம் பரிசை ஸ்ரீவி.,ராம்தாஸ், வெம்பக்கோட்டை ரங்கசாமி பெற்றனர்.

அதிகளவில் பட்டா மாறுதல் மனுக்களை ஏற்பு செய்த மண்டல துணை தாசில்தார்களில் முதல் பரிசை திருச்சுழி மண்டல துணை தாசில்தார் சிவனாண்டி, 2ம் பரிசை சாத்துார் முத்துலட்சுமி, 3ம் பரிசை ஸ்ரீவி., பாலகிருஷ்ணன் பெற்றனர்.

வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் அதிக அளவில் வசூல் மேற்கொண்ட வருவாய் தாசில்தார்களில் முதல் பரிசை ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரன், 2ம் பரிசை சிவகாசி ராஜகுமார் 3ம் பரிசை விருதுநகர் செந்தில்வேல் பெற்றனர்.

ஆன்லைன் சான்றுகளை அதிகளவில் ஏற்பு செய்த தாசில்தார்களில் முதல் பரிசை சாத்துார் முன்னாள் தாசில்தார் வெங்கடேஷ், 2ம் பரிசை திருச்சுழி முத்துகிருஷ்ணன், 3ம் பரிசை வத்திராயிருப்பு மாதா பெற்றனர்.

உதயம் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக கழிப்பறை அமைக்க ஆக்கப்பூர்வமாக முயற்சித்த வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ்க்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.டி.ஆர்.ஓ.,மங்களராமசுப்பிரமணியன், சப் கலெக்டர் பிருதிவிராஜ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X