தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பம்; விளையாட்டு அலுவலர் தகவல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பம்; விளையாட்டு அலுவலர் தகவல்

Added : நவ 17, 2021
Share
சிவகங்கை : தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.அவர் கூறியதாவது, தேசிய வளர்ச்சிக்கான பணிகளை செய்யும் இளைஞர்கள், தொண்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக தேசிய இளைஞர் விருது வழங்கப்படுகிறது. 2018 ஜன.,1 முதல் 2020 டிச.,31 வரையிலான காலத்தில் செய்த இளைஞர் நல பணிக்காக இந்த விருது வழங்கப்படும். தனி நபர் விருது 25

சிவகங்கை : தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, தேசிய வளர்ச்சிக்கான பணிகளை செய்யும் இளைஞர்கள், தொண்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக தேசிய இளைஞர் விருது வழங்கப்படுகிறது. 2018 ஜன.,1 முதல் 2020 டிச.,31 வரையிலான காலத்தில் செய்த இளைஞர் நல பணிக்காக இந்த விருது வழங்கப்படும். தனி நபர் விருது 25 பேர்களுக்கு பதக்கம், ரூ.1 லட்சம் வழங்கப்படும்.வயது 15 முதல் 29 க்குள் அவசியம்.

சமூக பணியாற்றி இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசு, அரசு சார்ந்த, பல்கலை, கல்லுாரி, பள்ளிகளில் பணிபுரிவோர் விண்ணப்பிக்க முடியாது. தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு பதக்கம், ரூ.3 லட்சம் வழங்கப்படும். அமைப்பு சார்ந்த 3 ஆண்டு ஆவணம் அவசியம். இளைஞர்களை சமுதாய பணியில் ஈடுபடும் விதத்தில் சிறப்பான சேவை செய்திருக்க வேண்டும். விருது பெற விரும்புவோர் இன்று (நவ.,17) மாலைக்குள் innovate.mygov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X