தமிழ்நாடு

நேரடி தேர்வு ரத்து கோரி ஆர்ப்பாட்டம்; கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
சிவகங்கை : அரசு கல்லுாரிகளில் நேரடி செமஸ்டர் தேர்வு முறையை ரத்து செய்யக்கோரி அனைத்து மாணவர்களும் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் செப்.,1 முதல் அரசு கல்லுாரிகளில் நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது. கொரோனா கால கட்டத்தில் அந்தந்த பல்கலை மூலம் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தினர். கல்லுாரிகளில்

சிவகங்கை : அரசு கல்லுாரிகளில் நேரடி செமஸ்டர் தேர்வு முறையை ரத்து செய்யக்கோரி அனைத்து மாணவர்களும் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் செப்.,1 முதல் அரசு கல்லுாரிகளில் நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது. கொரோனா கால கட்டத்தில் அந்தந்த பல்கலை மூலம் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தினர். கல்லுாரிகளில் வழக்கமான வகுப்புகள் நடைபெற்று வருவதால் பழைய நடைமுறைப்படி கல்லுாரிகளில் நேரடி செமஸ்டர் தேர்வினை நடத்தலாம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் இருந்து 300 மாணவர்கள் மதுரை முக்கு, திருப்புத்துார் ரோட்டில் ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலக ஆர்ச் முன் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா காலகட்டத்தில் நடத்தியது போன்று ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

டி.எஸ்.பி., பால்பாண்டி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், அழகர், பாண்டி, ஜெயராணி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அனைத்து மாணவ அமைப்பு சார்பில் கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X