சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை பறிகொடுத்த பெண்; போலீசார் அலைக்கழிப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
விருதுநகர் : காரியாபட்டி அருகே அயன்ரெட்டியபட்டி அம்பேத்தர் காலனியை சேர்ந்தவர் ஜெயகிருபா 24. மதுரை பசுமலை சென்றுவிட்டு விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து காரியாபட்டி செல்ல , பஸ்சில் இடம் பிடிக்க கையில் இருந்த பேக்கை சீட்டில் போட்டுள்ளார். பஸ் புறப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே வந்த போது பேக்கை சரிபார்த்த போது அதில் இருந்த 5 பவுன் நகை காணாமல் போனது

விருதுநகர் : காரியாபட்டி அருகே அயன்ரெட்டியபட்டி அம்பேத்தர் காலனியை சேர்ந்தவர் ஜெயகிருபா 24. மதுரை பசுமலை சென்றுவிட்டு விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து காரியாபட்டி செல்ல , பஸ்சில் இடம் பிடிக்க கையில் இருந்த பேக்கை சீட்டில் போட்டுள்ளார்.

பஸ் புறப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே வந்த போது பேக்கை சரிபார்த்த போது அதில் இருந்த 5 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது. போலீசில் புகார் அளிக்க சென்றபோது போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டை காரணம் காட்டி அலைக்கழிக்கப்பட்டார். போலீசார் கூறுகையில்,''இவர் பசுமலையில் இருந்து பல டவுன்பஸ் மாறி வந்திருப்பதால் நகை தவற விட்ட இடம் சரியாக தெரியவில்லை. இதனால் வழக்கு மதுரையில் பதிவதற்கும் வாய்ப்பு உள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X