காரியாபட்டி : வறண்டு கிடக்கும் கீழ உப்பிலிக்குண்டு, டி.கடமங்குளம் கண்மாய்களுக்கு நிலையூர் கால்வாயிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இக்கண்மாய் பாசனத்தில் ஆயிரம் ஏக்கர் வரை நெல் விவசாயம் நடக்கிறது. நீர் ஆதாரமாக மதுரை மாவட்டம் நிலையூர் கால்வாயில் இருந்து உலகாணி கூடக்கோயில் கண்மாய் நிறைந்து கீழ உப்பிலிக்குண்டு, டி.கடமங்குளம் கண்மாய்கள் நிறையும். உபரி நீர் வரத்து கால்வாய் வழியாக கம்பிக்குடி கண்மாய் செல்லும்.
மற்றொரு வழித்தடமாக கொக்குளம், மேல உப்பிலிக்குண்டு கண்மாய்கள் நிறைந்து உபரி நீர் கீழஉப்பிலிக்குண்டு, டி.கடமங்குளம் கண்மாய்கள் நிறைந்து உபரிநீர் கம்பிக்குடி கண்மாய்க்கு வரும். இந்த இரு வழித்தடங்களிலும் போதிய அளவு மழை பொழிவு இருந்தும் வரத்து கால்வாயை சீரமைக்காததால் தண்ணீர் வரத்து தடைபட்டு இப்பகுதி கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன.
தற்போது நிலையூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு ஒவ்வொரு கண்மாய்களாக நிறைந்து வருகிறது. இது போல் காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள கீழஉப்பிலிக்குண்டு, டி. கடமங்குளம் கண்மாய்களுக்கும் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE