தமிழ்நாடு

பட்டா மாறுதல் செய்ய முடியாமல் சிக்கல்!

Added : நவ 17, 2021
Share
Advertisement
சிவகங்கை : மாவட்டத்தில் இறப்பு சான்று கோரி கோட்டாட்சியர் அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மனுக்கள் காத்திருக்கின்றன. இதனால் பட்டா மாறுதல் செய்ய முடியாமல் சிக்கல் நீடிக்கிறது. தற்போது நடக்கும் பட்டா மாறுதல் முகாம்களிலேயே இறப்பு சான்றுகளையும் வழங்க வேண்டும்.குடும்ப தலைவர் இறப்பிற்கு ஒரு ஆண்டுக்குள் தாசில்தாரிடம் நேரடியாக இறப்பு சான்று பெற வேண்டும். இல்லாத பட்சத்தில்

சிவகங்கை : மாவட்டத்தில் இறப்பு சான்று கோரி கோட்டாட்சியர் அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மனுக்கள் காத்திருக்கின்றன. இதனால் பட்டா மாறுதல் செய்ய முடியாமல் சிக்கல் நீடிக்கிறது. தற்போது நடக்கும் பட்டா மாறுதல் முகாம்களிலேயே இறப்பு சான்றுகளையும் வழங்க வேண்டும்.

குடும்ப தலைவர் இறப்பிற்கு ஒரு ஆண்டுக்குள் தாசில்தாரிடம் நேரடியாக இறப்பு சான்று பெற வேண்டும். இல்லாத பட்சத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தே உரிய விசாரணைக்கு பின் இறப்பு சான்று வழங்கப்படும். அதுபோன்று கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்த ஆயிரணக்கான இறப்பு சான்றுக்கான மனு 5 ஆண்டுக்கும் மேலாக விசாரணை நிலையில் உள்ளது.

இதனால் இறப்பு சான்று பெற்று, அதன் பின் வாரிசு சான்று பெற்ற பின்னரே சொத்துக்களை பிரித்து எழுதமுடியும்.ஆனால் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக இறப்பு சான்றுக்கான விசாரணை நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக பலர் பட்டா மாறுதல்கள் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே தற்போது நடக்கும் பட்டா மாறுதல் முகாமில் பங்கேற்கும் வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ.,க்களிடம் நேரடி விசாரணை செய்து உடனுக்குடன் இறப்பு சான்று வழங்கினால், அவர்கள் பட்டா மாறுதல் செய்ய எளிமையாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

ஆர்.அருள்ராஜ், மாநில செய்தி தொடர்பாளர், கிராம நிர்வாக அலுவலர் சங்கம்: இன்றைக்கும் இறந்தவர்கள் பெயரில் தான் பட்டா உள்ளது. இதனால் வாரிசுதாரர்கள் பெயருக்கு பட்டாவை மாற்ற முடிய வில்லை. பட்டா மாறுதல் முகாமில் அனைத்து தரப்பு அதிகாரிகளும் பங்கேற்பதால் உடனுக்குடன் இறப்பு சான்று வழங்கலாம். அதற்கு பின் பல பட்டா மாறுதல்கள் எளிமையாக நடைபெறும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X