பொது செய்தி

தமிழ்நாடு

குண்டாற்றில் கடைமுக பூஜை; திருச்சுழியில் பெண்கள் சிறப்பு வழிபாடு

Added : நவ 17, 2021
Share
Advertisement
திருச்சுழி : திருச்சுழி குண்டாற்றில் ஐப்பசி கடைசி நாளான நேற்று கணவரின் ஆயுள் நீடிக்கவும், கன்னி பெண்களுக்கு திருமணம் நடக்கவும் பெண்களால் கடைமுக பூஜை நடத்தப்பட்டது50 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இப்பூஜையை யொட்டி ஆற்றின் கரையில் பெண்கள் ஏழு வகையான மண்ணை எடுத்து கங்கை, காவிரி, யமுனை, சரஸ்வதி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி ஆகிய ஏழு கன்னி தெய்வங்களை உருவமாக செய்து

திருச்சுழி : திருச்சுழி குண்டாற்றில் ஐப்பசி கடைசி நாளான நேற்று கணவரின் ஆயுள் நீடிக்கவும், கன்னி பெண்களுக்கு திருமணம் நடக்கவும் பெண்களால் கடைமுக பூஜை நடத்தப்பட்டது

50 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இப்பூஜையை யொட்டி ஆற்றின் கரையில் பெண்கள் ஏழு வகையான மண்ணை எடுத்து கங்கை, காவிரி, யமுனை, சரஸ்வதி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி ஆகிய ஏழு கன்னி தெய்வங்களை உருவமாக செய்து வழிபட்டனர். தங்கள் கணவரின் ஆயுளை நீட்டிக்க சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பெண்கள் புத்தாடைகள், தங்க நகைகள், 21 வகை பழ வகைகளை வைத்து கரும்பினால் பந்தல் அமைத்து, கரை மேல் உள்ள திருமேனிநாதர் சகாய வள்ளி அம்மனை தரிசித்தனர். அருப்புக்கோட்டை, திருச்சுழி, மதுரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

பெண்கள் கூறியதாவது: இங்கு பூஜை செய்வது ராமேஸ்வரம் கடலில் புனித நீராடுவதற்கு சமம். பூஜை செய்தால் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் தீரும். கணவனின் ஆயுள் நீடிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X