வனத்துறை மேய்ச்சல் நிலத்தில் கால்நடைகளை அனுமதிக்கவும் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறை மேய்ச்சல் நிலத்தில் கால்நடைகளை அனுமதிக்கவும்

Added : நவ 17, 2021
Share
சிவகங்கை : காளையார்கோவில் பகுதியில் உள்ள பி.உடையரேந்தல் சுற்றுக்கிராமப்பகுதிகளில் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் கால்நடைகளை அனுமதிக்க வேண்டும், என அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.பி.உடையரேந்தல் பகுதியில் மேலக்கடம்பங்குடி, உதராப்புலி, பொருசுப்பட்டி, வீராகுளம், சிங்கனோடை காலனிகளில் உள்ள தரிசு புஞ்சை புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இதில்

சிவகங்கை : காளையார்கோவில் பகுதியில் உள்ள பி.உடையரேந்தல் சுற்றுக்கிராமப்பகுதிகளில் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் கால்நடைகளை அனுமதிக்க வேண்டும், என அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பி.உடையரேந்தல் பகுதியில் மேலக்கடம்பங்குடி, உதராப்புலி, பொருசுப்பட்டி, வீராகுளம், சிங்கனோடை காலனிகளில் உள்ள தரிசு புஞ்சை புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இதில் காப்புக்காடுகள் என்ற பெயரில் வனத்துறையினர் கால்நடைகளை அனுமதிக்க மறுக்கின்றனர். தற்போது பருவமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.குடியிருப்புகளை சுற்றியுள்ள அனைத்து நிலங்களும் காப்புக்காடுகள் வனத்துறையினர் எங்களை வெளியறே விடாமல் செய்து வருகின்றனர். காப்புக்காடுகள் தவிர்த்து அரசு புஞ்சை புறம்போக்கு மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளை அனுமதிக்க வேண்டும். கால்நடை மேய்ச்சலுக்கு இடையூறு செய்யும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் புகார் அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X