திருப்பூர் : ஹிந்து மதத்தை அவதுாறாக பேசி வரும் திருமாவளவனை கண்டித்து, திருப்பூரில் சிவனடியார்கள் நுாதன போராட்டம் நடத்தினர்.
சில நாட்களுக்கு முன், ஹிந்து மத வழிபாடுகள் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவதுாறாக பேசியுள்ளார். இதற்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவ்வகையில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் முன், அனைத்து சிவனடியார் திருக்கூட்டத்தினர், தேவாரம், திருவாசகம், சிவபுராண பாடல்களை பாராயணம் செய்து, திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்து, நுாதன முறையில் போராட்டம் நடத்தினர். பின், திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் திருமாவளவன் மீது புகார் அளித்தனர்.

சிவனடியார்கள் கூறுகையில், 'திருமாவளவன், ஹிந்து மத வழிபாட்டு முறைகள், அருளாளர்கள் குறித்து, உண்மைக்கு புறம்பாக சித்தரித்து, அவதுாறாக பேசி வருவதை நிறுத்தி கொள்ள வேண்டும். பிற மத வழிபாட்டில் தலையிடும் அவருக்கு நல்ல புத்தி பிறக்க வேண்டும் என, திருமுறை பாராயணம் செய்து வேண்டுதல் நடத்தியுள்ளோம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE