தனியார் மருத்துவமனைகள் சிசேரியனை தவிர்க்க வலியுறுத்தல் ; அமைச்சர் சுப்பிரமணியன்

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை : ''குறிப்பிட்ட தேதிகளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதை, தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், 11ம் தேதி 24 மணி நேரத்தில் 68 பிரசவங்கள் நடந்தன. இதில், 60 சதவீதம் சுகப் பிரசவம்; 40 சதவீதம் சிசேரியன்சென்னை : ''குறிப்பிட்ட தேதிகளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதை, தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.latest tamil news


சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், 11ம் தேதி 24 மணி நேரத்தில் 68 பிரசவங்கள் நடந்தன. இதில், 60 சதவீதம் சுகப் பிரசவம்; 40 சதவீதம் சிசேரியன் .சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கிய அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

மாநிலம் முழுதும் அரசு மருத்துவமனைகளில், 65 சதவீதம் பிரசவம் நடைபெறுகிறது; 35 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில், 65 சதவீதமாக உள்ள சுகப் பிரசவம், தனியார் மருத்துவமனைகளில் 37 சதவீதமாக குறைந்துள்ளது.

வெளிநாடுகளில் 80 சதவீதம் சுகப் பிரசவம்; 20 சதவீதம் மட்டுமே சிசேரியன். தமிழகத்தில் முன்பெல்லாம், 100 சதவீதம் சுக பிரசவமாக இருந்தது. தற்போது, சுகப் பிரசவம் குறைந்து சிசேரியன் சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட தேதிகளில், குழந்தையை வெளியில் எடுப்பது தான் காரணமாக உள்ளது.


latest tamil newsஇவற்றை ஊக்கப்படுத்தக் கூடாது என, டாக்டர்களை அறிவுறுத்தி உள்ளோம். தேவையில்லாத சிசேரியன் தவிர்க்குமாறு, தனியார் மருத்துவமனைகளுக்கு கடிதம் எழுத உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், துறை செயலர் ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழு இயக்குனர் தரேஸ் அகமது உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
17-நவ-202115:07:11 IST Report Abuse
Sivagiri இப்படியெல்லாம் soft-ஆ சொன்னால் என்ன ஆக போகுது ? . . . தெளிவா வெளிப்படையான ரூல்ஸ் போட்டாத்தானே சரியாகும் ? . . . இப்போ எல்லாம் காசு இருக்குறவங்க - அல்லது மந்திரிகளின் பினாமிகள் - பெரிசு பெரிசா ஆஸ்பத்திரி கட்டி மிஷின் எல்லாம் வாங்கி வச்சு - இருபது முப்பது டாக்டர்களை சம்பளத்துக்கு போட்டு - பெரிய கார்பொரேட் தொழிலாவே நடத்துறாங்க - அவிங்க எல்லாம் யார் என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாய்ங்க . . . அங்க என்ன நடக்குதுன்னே யாராலயும் கண்டு பிடிக்க முடியாதே . . . . . . சில ஆஸ்பத்திரிகளில் ஒரு ஓரமாக - நுகர்வோர் உரிமை/நோயாளிகள் உரிமை என்று - ஆங்கிலத்தில் போர்டு வச்சிருக்காங்க , ஆனா அதெல்லாம் யாராலயும் படிக்க முடியாது - - படிச்சு புரிஞ்சிக்க முடியாது . . . தெளிவான வெளிப்படையான ரூல்ஸ் எல்லா மக்களுக்கும் தெரியிற மாதிரி அறிவிக்க வேண்டும் . . .
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
17-நவ-202114:57:23 IST Report Abuse
Kumar குழந்தை பெறுவதும். எவ்வாறு பெற்று எடுப்பது என்பதும் பெண்களின் உரிமை. முதலில் அதை பெண்களுக்கு கொடுங்கள். எல்லாவற்றிற்கும் கடிதம் எழுத வேண்டாம். வாழ்க வளமுடன்.வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel
Ashok -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-202113:09:18 IST Report Abuse
Ashok Really Private Doctors are Insisting for forcing to do Cesarean and at the final time make confusing the Mothers and parents with Medical techniques. Its happen in my real life and before admin Doctor verified all records and spoke like can do with Normal delivery with 100 confidence and after admit in hospital simply change the story....In Govt Hospital they are trying 100 for normal delivery but in private hospital its just opposite.... In Madurai Munichallai Ajeeth Nursing home is fully blackmailing and cheating....Govt had to take Action on this...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X