சின்னமனூரில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சின்னமனூரில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : நவ 17, 2021
Share
சின்னமனுார்: சின்னமனுாரில் இன்று (நவ.,17) நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொள்கின்றனர். வர்த்தகர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.சின்னமனுாரில் மெயின்ரோடு ஒரு கி.மீ., துாரம் உள்ளது. இரு பக்கமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. கடைகளில் விளம்பர பலகைகளை கடை வாசலில் வைப்பதாக கூறி

சின்னமனுார்: சின்னமனுாரில் இன்று (நவ.,17) நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொள்கின்றனர்.

வர்த்தகர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.சின்னமனுாரில் மெயின்ரோடு ஒரு கி.மீ., துாரம் உள்ளது. இரு பக்கமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. கடைகளில் விளம்பர பலகைகளை கடை வாசலில் வைப்பதாக கூறி ரோட்டை ஆக்கிரமிக்கின்றனர். கடை படிகள் ரோட்டில் கட்டப்பட்டுள்ளது. மெயின்ரோட்டில் வாகனங்கள், மக்கள் செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது. சீப்பாலக்கோட்டை ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடுகளிலும் இதே நிலை தான். தற்போது நெடுஞ்சாலைத்துறை, நகராட்சியும் இணைந்து இன்று மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற உள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மீண்டும் ஆக்கிரமிக்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X