பொது செய்தி

தமிழ்நாடு

இரவங்கலாறில் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : நவ 17, 2021
Share
Advertisement
கம்பம்: இரவங்கலாறில் கனமழை, பனிமூட்டம் அதிகம் இருப்பதாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேகமலை பகுதியில் வனத்துறையினர், போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.மேகமலையில் நேற்று காலை முதல் கனமழை தொடர்கிறது. மலைக்கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இங்குள்ள அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. பனிமூட்டம் இரவு மட்டுமின்றி பகலிலும் போக்குவரத்திற்கு

கம்பம்: இரவங்கலாறில் கனமழை, பனிமூட்டம் அதிகம் இருப்பதாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேகமலை பகுதியில் வனத்துறையினர், போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

மேகமலையில் நேற்று காலை முதல் கனமழை தொடர்கிறது. மலைக்கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இங்குள்ள அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. பனிமூட்டம் இரவு மட்டுமின்றி பகலிலும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. எதிரில் வரும் வாகனங்கள் மஞ்சள் விளக்கை எரிய விட்டால் தான் விபத்தை தவிர்க்க முடியும் என போலீசார் கூறி அனுப்புகின்றனர். மலைக்கிராமங்களில் மண் சரிவு, மரங்கள் விழுவது, மின்கம்பங்கள் சாய்வது ஆங்காங்கே ஏற்படுகிறது.

சின்னமனுார் - ஹைவேவிஸ் மலைப்பைாதையில் மண் சரிவுகள் அதிகம் ஏற்படும். எனவே, வனத்துறை,போலீசார் தயார் நிலையில் உள்ளனர். கனமழையால் மலைகளில் பல்வேறு சிறுசிறு நீர்வீழ்ச்சிகள் தோன்றி, தண்ணீர் முழுவதும் சுருளி அருவியை நோக்கி பாய்கிறது. அருவியில் விழும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. வனத்துறையினர் அருவி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X