பொது செய்தி

தமிழ்நாடு

ஆபத்தான மேல்நிலை தொட்டி, அச்சுறுத்தும் தெரு நாய்கள்; குமுறும் தேனி கே.ஆர்.ஆர்., நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள்

Added : நவ 17, 2021
Share
Advertisement
தேனி: நடைபயிற்சி மேற்கொள்பவர்களை அச்சுறுத்தும் தெருநாய்கள், சேதமடைந்து குடிநீர் மேல்நிலைத் தொட்டி, செம்மண் குவியல், மேடு பள்ளங்களால் போக்குவரத்திற்கு இடையூறு, சாக்கடை கால்வாய்கள் சேதம், சமூக விரோதகளின் கூடாரமான பாழடைந்த தனியார் பள்ளி கட்டடம்” ஆகியவற்றால் அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படுவதாக தேனி கே.ஆர்.ஆர்., நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்

தேனி: நடைபயிற்சி மேற்கொள்பவர்களை அச்சுறுத்தும் தெருநாய்கள், சேதமடைந்து குடிநீர் மேல்நிலைத் தொட்டி, செம்மண் குவியல், மேடு பள்ளங்களால் போக்குவரத்திற்கு இடையூறு, சாக்கடை கால்வாய்கள் சேதம், சமூக விரோதகளின் கூடாரமான பாழடைந்த தனியார் பள்ளி கட்டடம்” ஆகியவற்றால் அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படுவதாக தேனி கே.ஆர்.ஆர்., நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குமுறுகின்றனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சியின் 21வது வார்டில் கே.ஆர்.ஆர். நகர் குடியிருப்பு நலச்சங்கள் அமைந்துள்ளது. 13 தெருக்களில் 450 குடியிருப்புக்கள் உள்ளன. நலச்சங்கத்தின் நிர்வாகிகள் முத்துராமலிங்கம், ராஜா, ராஜமோகன், ராமராஜ், ராஜமாணிக்கம் ஆகியோர் கூறியதாவது: குடியிருப்புப் பகுதிகளில் காலை, மாலையில் பெண்கள், வயதானவர்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். தெருநாய்கள் கூட்டமாக அச்சுறுத்தும் வகையில் செல்வதால் சிரமம் ஏற்படுகிறது. நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சிறுவர் சிறுமிகளும் தெருக்களில் விளையாட முடியவில்லை. 13 தெருக்களில் 6 தெருக்களில் மின் விளக்கு எரியவில்லை என நகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

கூடுதல் தொட்டி தேவைஅனைத்து குடியிருப்புக்களும் வாரம் ஒரு முறை குடிநீர் சப்ளை ஆகிறது. இது மேடான பகுதி என்பதால் குடிநீர் மிக குறைவாக கிடைக்கிறது. இதனால் கூடுதலாக மேல்நிலைத்தொட்டி அமைத்து பற்றாக்குறை இன்றி குடிநீர் சப்ளை செய்ய வேண்டும். வன காப்புக்காடுகளை ஒட்டி தனியார் பள்ளிக்கூடம் பல ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடக்கிறது. போலீசார் ரோந்து வருவது அவசியம். வன பகுதியில் தடுப்பு வேலி இல்லாததால் இங்குள்ள விலங்குகள், பறவைகள் மீது மர்மநபர்கள் தாக்குவது தொடர்கிறது.

காப்புகாடுகளில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.ஆபத்தான மேல்நிலை தொட்டி1980ல் 6வது தெருவில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பயன்பாடு இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது. அதனை இடிக்கும் பணி துவங்கிய நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. விரைந்து முடிக்க வேண்டும். 13 தெருக்களில் சாக்கடை கால்வாய் தேசமடைந்து துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும். ரோடுகள் பள்ளம், மேடாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இங்கு அமைக்கப்பட்டுள்ள உரக்கிடங்கால் சுகாதாரக்கேடு ஏற்படும் என மக்கள் புகார் அளித்தும், நகராட்சி மாற்றவில்லை.” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X