பொது செய்தி

இந்தியா

ஜாகிர் நாயக் அமைப்புக்கு மேலும் 5 ஆண்டு தடை

Updated : நவ 17, 2021 | Added : நவ 17, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு ஊக்குவித்த ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு விதிக்கப்பட்ட தடை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மும்பையைச் சேர்ந்த மத போதகரான ஜாகிர் நாயக், இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை வாயிலாக 'பீஸ் டிவி' மற்றும் சமூக ஊடகங்களில் மத வெறுப்புணர்வு பிரசாரம் செய்து வந்தார். அத்துடன்,
Zakir Naik, Islamic Evangelist, IRF foundation, ban

புதுடில்லி: முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு ஊக்குவித்த ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு விதிக்கப்பட்ட தடை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த மத போதகரான ஜாகிர் நாயக், இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை வாயிலாக 'பீஸ் டிவி' மற்றும் சமூக ஊடகங்களில் மத வெறுப்புணர்வு பிரசாரம் செய்து வந்தார். அத்துடன், முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு துாண்டியது உள்ளிட்ட காரணங்களால், அவரது இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு 2016ல் மத்திய அரசு தடை விதித்தது.சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பித்த இந்த தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


latest tamil newsகடந்த 2016 ஜூலை 1ல், வங்கதேச தலைநகர் டாக்காவில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், வெளிநாட்டினர் 17 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒரு இளைஞர், ஜாகிர் நாயக்கின் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு, தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தார். இதையடுத்து இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற ஜாகிர் நாயக், தற்போது மலேஷியாவில், அரசு ஆதரவில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-நவ-202120:12:59 IST Report Abuse
சம்பத் குமார் 1). மனிதன் மெத்த படித்த அறிவாளி என்ற நினைப்பில் பேசுபவர். 2). மனம் எண்ணம் செயல் போன்றவற்றில் விஷம் போன்றவர்.3). தன் மதத்தை புகழ்ந்து பேசினால் ஒகே அவர் மதத்தை அதிகம் விரும்புகிறார் என்று அர்த்தம் கொள்ளலாம்.4). ஆனால் பிற மதத்தை குறைவாக சொல்வார்.5). இதை விட ஆபத்தான விஷயம் தன் மதத்தில் உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்து அவர்களை வேறு பாதையில் அழைத்து செல்வார். பெற்றோர்களின் நிலையை நினைத்து பாருங்கள். எந்த தந்தை தாய் தன் மகன் ஒரு தீவிரவாதியாக மாறுவதை விரும்பமாட்டார்கள்.5). இதைவிட கேவலமான விஷயம் தான் பிறந்த சொந்த நாட்டிற்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுவார்.6). இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு தெரியும் இந்த பாரத தேசம் எவ்வளவு அருமையானது என்று.7). Even Islam itself run away from him because of his lies and terrorism activities.8).Let him stay at Malaysia itself, No need to come back to India. Thanks.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
17-நவ-202116:12:02 IST Report Abuse
Kumar பேரு தான் பீஸ், அமைதி.செய்வது எல்லாம் ... வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
17-நவ-202113:41:29 IST Report Abuse
Barakat Ali தேசியத்திலும், மதநல்லிணக்கத்திலும் நம்பிக்கை உள்ள என்னைப்போன்ற பல முஸ்லிம்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய இவனை வெறுக்கிறோம்
Rate this:
17-நவ-202117:49:08 IST Report Abuse
SUBBU, MADURAI.அருமை நண்பரே எங்கள் குலதெய்வம் முத்துராமலிங்க தேவரும் அதையேதான் சொன்னார். நன்றி பரக்கத்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X