பொது செய்தி

தமிழ்நாடு

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் சுணக்கம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் (கிராமம்) நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் மத்திய அரசு சார்பில் ரூ.1.20 லட்சமும், தமிழக அரசு சார்பில் 1.50 லட்சமும் மானியமாக கிடைக்கும். இந்த மானியம் 4 தவணையாக வழங்கப்படுகிறது.தேனி மாவட்டத்தில் 2019-2020ம் ஆண்டுக்கு 225 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் தற்போது வரை 165 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 60 வீடுகள் முழுமையாக

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் (கிராமம்) நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் மத்திய அரசு சார்பில் ரூ.1.20 லட்சமும், தமிழக அரசு சார்பில் 1.50 லட்சமும் மானியமாக கிடைக்கும். இந்த மானியம் 4 தவணையாக வழங்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் 2019-2020ம் ஆண்டுக்கு 225 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் தற்போது வரை 165 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 60 வீடுகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. தற்போதும் பணிகள் நடந்து வருகிறது. இவற்றில் கம்பம், தேனி ஒன்றியங்கள் தவிர்த்து மற்ற 7 ஒன்றியங்களில் பணிகளில் சுணக்கமாக உள்ளது. ஆண்டிபட்டி ஒன்றியம் 23, போடி, பெரியகுளத்தில் தலா 14, சின்னமனுாரில் 3, க.மயிலாடும்பாறையில் 5, உத்தமபாளையத்தில் ஒன்று என வீடு கட்டுமான பணி நிலுவையில் உள்ளது. இதில் அஸ்திவார பணியில் 11 வீடுகள், ஜன்னல்மட்டத்தில் 21, கான்கீரிட் லாப்ட் மட்டத்தில் 13, கான்கீரிட் முடிந்தது 6, சிமெண்ட் பூச்சு நிலையில் 9 வீடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X