பொது செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழையில்நெற்பயிர்களை காக்க ஆலோசனை

Added : நவ 17, 2021
Share
Advertisement
தேனி: தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையில் நெற்பயிர்களை பாதுகாப்பது குறித்து வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.வயலில் நீர் தேங்கினால் நெற்பயிரில் தழை, துத்தநாக சத்து குறைபாட்டால் இளமஞ்சள், மஞ்சள் நிறமாக மாறும். இதனால் நீர் வடிந்தவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, ஒரு கிலோ துத்தநாக சல்பேட் உரத்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். நெற்பயிர் பூக்கும்

தேனி: தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையில் நெற்பயிர்களை பாதுகாப்பது குறித்து வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

வயலில் நீர் தேங்கினால் நெற்பயிரில் தழை, துத்தநாக சத்து குறைபாட்டால் இளமஞ்சள், மஞ்சள் நிறமாக மாறும். இதனால் நீர் வடிந்தவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, ஒரு கிலோ துத்தநாக சல்பேட் உரத்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். நெற்பயிர் பூக்கும் பருவத்தில் இருந்தால் ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை 10 லிட்டர் நீரில் கரைத்து மறுநாள் வடிகட்டி 2 கிலோ யூரியாவை 190 லிட்டர் நீரில் கலைத்து மாலையில் கைத்தெளிப்பானால் தெளித்து இலைவழியாக உரமிட வேண்டும்.

பயிர் வளர்ச்சி குன்றி இருந்தால் நீர் வடிந்தவுடன் ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு இரவு வைத்து 17 கிலோ பொட்டாஷ் உரம் சேர்த்து மேலுரமாக இட வேண்டும். வேளாண், தோட்டக்கலை அலவலர்களை அணுகி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X