நத்தம் மருத்துவமனையில் திரியும் மாடுகளால் அச்சம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
நத்தம் : நத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரியும் மாடுகளால் சிகிச்சைக்கு வருபவர்கள் அவதிப்படுகின்றனர்.நத்தம் அரசு மருத்துவமனைக்கு தினமும் நுாற்றுக் கணக்கானோர் சிகிச்சை பெற வருகின்றனர். அம்மருத்துவமனை வளாகத்தில் எந்நேரமும் 40க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மாடுகள் தங்களை தாக்கி விடுமோ என்ற

நத்தம் : நத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரியும் மாடுகளால் சிகிச்சைக்கு வருபவர்கள் அவதிப்படுகின்றனர்.

நத்தம் அரசு மருத்துவமனைக்கு தினமும் நுாற்றுக் கணக்கானோர் சிகிச்சை பெற வருகின்றனர். அம்மருத்துவமனை வளாகத்தில் எந்நேரமும் 40க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மாடுகள் தங்களை தாக்கி விடுமோ என்ற அச்சத்திலேயே சென்று வருகின்றனர். இந்த மாடுகள் பஸ் ஸ்டாண்ட் மற்றும் போக்குவரத்து மிகுந்த ரோடுகளிலும் திரிவதால் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். நத்தம் பேரூராட்சியை சேர்ந்த சிலரே இம்மாடுகளை வளர்க்கின்றனர்.

அவற்றை முறையாக கொட்டிலில் கட்டி வைத்து வளர்க்காமல், கண்டபடி மேய விடுகின்றனர். இதனால் அவை மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் சர்வ சுதந்திரமாக வலம் வருகின்றன. பேரூராட்சி நிர்வாகம் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X