பொது செய்தி

தமிழ்நாடு

முத்துபூபால சமுத்திரம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : சத்திரப்பட்டி அருகே தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம் கண்மாய் நிரம்பி மறுகால் சென்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஒட்டன்சத்திரம் ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சி, தாசரிபட்டியில் முத்துபூபாலசமுத்திரம் கண்மாய் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு பரப்பலாறு அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு இந்த கண்மாய்க்கு சென்றது. தற்போது கண்மாய்

ஒட்டன்சத்திரம் : சத்திரப்பட்டி அருகே தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம் கண்மாய் நிரம்பி மறுகால் சென்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒட்டன்சத்திரம் ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சி, தாசரிபட்டியில் முத்துபூபாலசமுத்திரம் கண்மாய் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு பரப்பலாறு அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு இந்த கண்மாய்க்கு சென்றது. தற்போது கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த நீர் நங்காஞ்சி ஆற்றின் வழியாக செல்கிறது. கடந்த ஆண்டும் கண்மாய் நிரம்பி மறுகால் சென்றதாக விவசாயிகள் கூறினர்.

பரப்பலாறு அணை நீரால் விருப்பாச்சி பெருமாள் குளம் இன்னும் ஓரிரு நாட்களில் மறுகால் செல்லும் நிலையில் உள்ளது.பெருமாள் குளம் நிரம்பினால், வெளியேறும் உபரி நீர் காவேரியம்மா பட்டி பெரிய குளத்திற்கு சென்றடையும். அணை நீரால் குளங்கள் நிரம்பி வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X