பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த பாலம் சீரமைக்காததால் தண்ணீர் திறக்க முடியாத சோகம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
கம்பம்: 18ம் கால்வாய் பாலம் சீரமைக்காததால் அணையில் தண்ணீர் இருந்தும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.கம்பம் பள்ளத்தாக்கு மேற்கு பகுதி மானாவாரி காடுகளின் பாசனத்திற்காக 18 ம் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆண்டு தோறும் குறிப்பிட்ட அளவில் லோயர்கேம்ப் அருகில் தலைமதகிலிருந்து நீர் திறந்துவிடுவார்கள். 2 மாதங்களாக வினாடிக்கு 150 கனஅடி வீதம்

கம்பம்: 18ம் கால்வாய் பாலம் சீரமைக்காததால் அணையில் தண்ணீர் இருந்தும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.

கம்பம் பள்ளத்தாக்கு மேற்கு பகுதி மானாவாரி காடுகளின் பாசனத்திற்காக 18 ம் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆண்டு தோறும் குறிப்பிட்ட அளவில் லோயர்கேம்ப் அருகில் தலைமதகிலிருந்து நீர் திறந்துவிடுவார்கள். 2 மாதங்களாக வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து வாய்க்காலில் சென்றது. தேவாரம் சுத்தகங்கை ஓடையிலிருந்து போடிவரை நீட்டிப்பு செய்த பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது.வடகிழக்கு பருவமழை, 18 ம் கால்வாயில் அதிக நீர் வரத்து காரணமாக நவ. 4 ல்,புதுப்பட்டிக்கு மேற்கு திசையில் 18 ம் கால்வாயில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் செல்லும் பாலம் உடைந்தது. இதனால் புதுப்பட்டியை தாண்டி தேவாரம் பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. பாலம் உடைந்ததால் 18 ம் கால்வாய்க்கு நீர் திறப்பை நிறுத்தினர். பாலம் உடைந்து இரண்டு வாரங்கள் கடந்தும் பழுது சீரமைக்க வில்லை. அணையில் தண்ணீர் எடுக்க வாய்ப்பிருந்தும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளபட்டுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர். விரைவாக பாலம் சீரமைத்து தண்ணீர் திறக்க கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X