சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Added : நவ 17, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே விபத்தில் உயிரிழந்த லாரி டிரைவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.செம்பட்டி அருகே செங்கட்டாம்பட்டியை சேர்ந்த டிரைவர் அழகர்சாமி 36. இவர் கடந்த 3.11.2014 அன்று நடந்து சென்றபோது அரசு பஸ் மோதி உயிரிழந்தார். அழகர்சாமியின் குடும்பத்தினர், இழப்பீடு கேட்டு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே விபத்தில் உயிரிழந்த லாரி டிரைவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

செம்பட்டி அருகே செங்கட்டாம்பட்டியை சேர்ந்த டிரைவர் அழகர்சாமி 36. இவர் கடந்த 3.11.2014 அன்று நடந்து சென்றபோது அரசு பஸ் மோதி உயிரிழந்தார். அழகர்சாமியின் குடும்பத்தினர், இழப்பீடு கேட்டு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வக்கீல் ஜெயராமன் ஆஜரானார். அழகர்சாமியின் குடும்பத்துக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.12.52 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இழப்பீடு தொகை அதிகமாக இருப்பதாக கூறி போக்குவரத்து கழகம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தது. அதேசமயம் இழப்பீடு தொகை குறைவாக இருப்பதாக அழகர்சாமியின் குடும்பத்தினரும் மேல்முறையீடு செய்தனர். விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இழப்பீடாக ரூ.17 லட்சத்து 12 ஆயிரத்து 800 வழங்க உத்தரவிட்டது.எனினும் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சரவணன் முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அழகர்சாமியின் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.25 லட்சத்து 42 ஆயிரத்து 927 வழங்கும்படி தீர்ப்பளித்தார்.அதன்பின்னரும் இழப்பீடு தொகையை வழங்காததால், நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். பொள்ளாச்சி செல்ல திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நின்ற அரசு பஸ்சை, நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X