விழிப்புணர்வு கலந்துரையாடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு கலந்துரையாடல்

Added : நவ 17, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் போன்ற இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடக்கின்றன. திண்டுக்கல் அண்ணாமலையார் மகளிர்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் போன்ற இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடக்கின்றன. திண்டுக்கல் அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாநக ராட்சி கமிஷனர் சிவசுப்ரமணியன், எஸ்.பி., ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டனர். பெண் குழந்தைகள் விழிப்புணர்வுடன் இருத்தல், தற்காத்துக் கொள்வது பற்றி விளக்கப்பட்டது. புகார்களை பெற்றோர்களிடமோ, போலீசாரிடமோ தைரியமாக கூற வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X