தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் இணைய 9 ஆயிரம் பேர் விண்ணப்பம்! திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள் ஆர்வம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களாக இணைய 9 ஆயிரத்து 763 பேர் விண்ணப்பித்துள்ளனர்.கடந்த நவ.1 ம் தேதி சிறப்பு சுருக்க திருத்த வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. மேலும் பதினெட்டு வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களாக இணைய 9 ஆயிரத்து 763 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த நவ.1 ம் தேதி சிறப்பு சுருக்க திருத்த வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. மேலும் பதினெட்டு வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய நவ.13, 14 ம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

அதில் புதிதாக பெயர் சேர்க்க 9 ஆயிரத்து 763 பேர், நீக்குவதற்கு ஆயிரத்து 183 பேர், பிழைத்திருத்தம் செய்ய ஆயிரத்து 261 பேர், முகவரி மாற்றம் செய்ய ஆயிரத்து 179 பேர் என மொத்தம் 13 ஆயிரத்து 386 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் நவ.20, 21 மற்றும் 27, 28 ம் தேதியும் 2, 3ம் கட்டமாக சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

இதில் பெறப்படும் மனுக்களும் பரிலீக்கப்பட்டு 2022 ஜன.5 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ''வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள, முகாம்களில் பங்கேற்க இயலாதவர்கள் www.nvsp.in இணையதளத்திலும், voters help line செயலி வாயிலாக விண்ணப்பிக்கலாம்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X