பொது செய்தி

தமிழ்நாடு

திட்டமிடாமல் பாலம் இடிப்பு ; கார்த்திகை திருவிழா முடக்கம்

Added : நவ 17, 2021
Share
Advertisement
மூணாறு: மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் ரோட்டில் உள்ள பாலம் முறையாக திட்டமிடாமல் அவசரகதியில் இடிக்கப்பட்டதால் கார்த்திகை திருவிழா முடங்கியது. அந்த பாலம் பலம் இழந்ததால் புதிய பாலம் கட்டுவதற்கு 2019ல் மாவட்ட ஊராட்சி ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கியது. அந்த நிதியில் புதிய பாலம் கட்டுவதற்கு பழைய பாலம் இடிக்கப்பட்டது. அதன்பிறகு நடத்தி மண் பரிசோதனையில் பாறைகள்

மூணாறு: மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் ரோட்டில் உள்ள பாலம் முறையாக திட்டமிடாமல் அவசரகதியில் இடிக்கப்பட்டதால் கார்த்திகை திருவிழா முடங்கியது.

அந்த பாலம் பலம் இழந்ததால் புதிய பாலம் கட்டுவதற்கு 2019ல் மாவட்ட ஊராட்சி ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கியது. அந்த நிதியில் புதிய பாலம் கட்டுவதற்கு பழைய பாலம் இடிக்கப்பட்டது. அதன்பிறகு நடத்தி மண் பரிசோதனையில் பாறைகள் உள்ளதாக தெரிந்ததால் ஒதுக்கிய நிதி போதாது என கூறி ஒப்பந்ததாரர் பணிகளை கைவிட்டார். அதன்பிறகு மாவட்ட ஊராட்சி ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கியது. தற்போது ரூ.80 லட்சம் செலவில் பணிகள் நடந்து வருகிறது.


முடங்கியது:

பழநி தண்டாயுதபாணி கோயில் ஐதீகப்படி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூஜைகள் கடைபிடித்து திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு கொரோனாவால் கார்த்திகை திருவிழா முடங்கிது. இந்தாண்டு பாலம் இல்லாததால் தேர் பவனி,அலகு குத்துதல், பறவை காவடி நடத்த இயலாததால் கோயிலில் பூஜைகள் மட்டும் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. முறையாக திட்டமிடாமல் அவசரகதியில் பாலம் இடிக்கப்பட்டதால் கார்த்திகை திருவிழா முடங்கியது.-----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X